இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (01) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அதேபோல் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மின்னலால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
