2 பிள்ளைகளின் தாய் கணவரால் வெட்டிக்கொலை!


குருநாகல் மாவட்டத்தின் பன்னலைப் பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த 31 வயதுடைய கணவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்போது ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை தாக்கியுள்ளார். கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யப் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.