தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!


தைப்பொங்கலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் பயணத்தை சுமுகமாக நடத்தும் வகையில் விசேட போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஹட்டன், நுவரெலியா மற்றும் பதுளை உள்ளிட்ட பல நகரங்களுக்கு மேலதிக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.