கிளிநொச்சியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்
புதிய தகவல்
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நேரத்தில் காரில் ஐந்து பேர் பயணித்திருந்த நிலையில்,
அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி – ஏ35 பிரதான வீதியில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முரசுமோட்டை பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை
