இந்தியாவின் புத்த கயாவிற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தியாவின் புத்த கயாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபோதி மகா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, புத்த கயா விகாரையின் செயலாளர் கலாநிதி மகாஸ்வேதா மகாரதி மற்றும் அதன் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த புத்த ரத்ன தேரர், தம்மிஸ்ஸர தேரர், கௌடின்ய தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, 1891 ஆம் ஆண்டு அநகாரிக தர்மபாலவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மகாபோதி சங்கத்திற்கும் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார்.
அங்கு புத்த கயா மத்திய நிலையத்தின் வணக்கத்திற்குரிய கடகந்துரே ஜினானந்த தேரர், முல்தெனியவல சுசீல தேரர், ஞானரத்ன தேரர் மற்றும் வாகீச தேரர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
இந்த ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில் நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


