பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு!
பாடசாலை சீருடைகள் விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காக நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, பாடசாலைகளில் முதலாம் கட்ட வகுப்புகள் 29 ஆம் திகதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான கற்பித்தல் நடவடிக்கை 21 ஆம் திகதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
