இலங்கையில் ஒரே நாளில் ரூ.15,000 உயர்ந்த தங்க விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இலங்கையில் இன்று (29) தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்துவந்த விலையேற்றம், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இன்றைய தங்க விலை (இலங்கை)

24 கரட் தங்கம் (1 பவுண்) : ரூ. 420,000

22 கரட் தங்கம் (1 பவுண்) : ரூ. 384,700

24 கரட் தங்கம் (1 கிராம்) : ரூ. 52,500

22 கரட் தங்கம் (1 கிராம்) : ரூ. 48,088

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 5,500 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதே, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், தற்போதைய உயர்வைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையக்கூடிய சாத்தியமும் இருப்பதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.