முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சி.ஐ.டியினரால் கைது!


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு, இராணுவத்தால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷ் தொடர்பான விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளில், அது டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பதும், அதன் இலக்கங்கள் (Serial Numbers) மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

மாகந்துரே மதுஷ், 2020 ஆம் ஆண்டு பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது கொல்லப்பட்டிருந்தார்.

மேற்படி துப்பாக்கி எவ்வாறு தனது கட்டுப்பாட்டிலிருந்து காணாமல் போனது என்பது குறித்து, முன்னாள் அமைச்சர் திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் CID ஆல் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் தெரிவித்துள்ளது.