வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிக பணம் பெற்ற முச்சக்கரவண்டி சாரதிகள் கைது!


நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிருந்து உரிய கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தை பெற்ற குற்றச்சாட்டில், 

முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர் பொலிஸ் சுற்றுலாப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையானது கடந்த செப்டம்பர் 02 மற்றும் 05ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் முச்சக்கரவண்டிக்கு செலுத்த வேண்டிய தொகையான, 

10ஆயிரம் மற்றும் 30ஆயிரம் ரூபா என்ற கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தை பெற்றதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸ் சுற்றுலாப் பிரிவினரால் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

40 மற்றும் 48 வயதுடைய, இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.