வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!


வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடுவதற்கு 0112882228 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஏராளமான முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.