விபத்தில் சிக்கி 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ரோஹன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் குழந்தை ஒன்றும் சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ள நிலையில்,
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
