வாகன உரிமையாளரின் பெயரையும் உள்ளடக்கிய இலக்கத் தகடுகளை வழங்கும் புதிய முறை விரைவில்..!


புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வாகன உரிமையாளரின் பெயரையும் உள்ளடக்கிய இலக்கத் தகடுகளை வழங்கும் புதிய முறையையும் விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.