முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!


இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

 கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.