மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் - சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இக் கூட்டத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அதன்படி, மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்ளும் முன் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் என பங்காளி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் அது தம்முடைய எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும் தாமே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.