இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தேவை அதிகரிப்பு!


கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) 20% பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, உயர் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இவர்களில் 85% மின் பொறியியலாளர்கள், 8% இயந்திர பொறியியலாளர்கள் மற்றும் 7% சிவில் பொறியியலாளர்கள் ஆவர். இவர்கள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரிகின்றனர்.

இலங்கை பொறியியலாளர்கள் தமது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களுக்காக உலகளவில் அங்கீகாரம் பெற்று வருகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தி துறையில் சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் திறனை இவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

இந்தப் போக்கு, குறிப்பாக மின் துறையில், இலங்கை பொறியியல் நிபுணத்துவத்திற்கான உலகளாவிய தேவையை பிரதிபலிக்கிறது.