சீனாவிடமிருந்து இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!


2025 மற்றும் 2026 கல்வியாண்டுக்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கியுள்ளது. 

அதன்படி, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தில் உதவித் தொகைகளை கையளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுரா செனவிரத்ன இதனை தெரிவித்தார். 

165 இற்கும் அதிகமான மாணவர்கள் 2025 ஆம் ஆண்டில் இப் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 

பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், முகாமைத்துவம், விவசாயம், கலை போன்ற துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.