தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
பரீட்சை நேரங்கள்:
2ஆம் வினாப்பத்திரம்: காலை 9.30 - 10.45
1ஆம் வினாப்பத்திரம்: காலை 11.15 - 12.15
விண்ணப்பித்த அனைத்து பரீட்சார்த்திகளின் வரவு இடாப்புகள், உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
இன்னும் வரவு இடாப்பு பெறாதவர்கள், கீழ்கண்ட இணையதளங்கள் மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்:
🌐 www.doenets.lk (Exam Information Centre)
🌐 http://onlineexams.gov.lk/eic
விண்ணப்பதாரர் தொடர்பான தகவல்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 04 வரை நிகழ்நிலையில் அதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளுக்கு:
📞 011-2784208 / 2784537 / 2786616 / 2785413
📞 துரித அழைப்பு இலக்கம்: 1911
📠 தொலைநகல்: 011-2784422
– ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே,
பரீட்சை ஆணையாளர் நாயகம்
