தேங்காய் ஏற்றுமதி தொடர்பான மத்திய வங்கியின் அறிவிப்பு
தேங்காய் ஏற்றுமதி தொடர்பான மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தேங்காய் மற்றும் தேயிலை ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே மாதங்கள் வரை 158.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், 2025ஆம் ஆண்டில் 25.3% உயர்வுடன் 198.1 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதனுடன், தேயிலை ஏற்றுமதியிலும் 7.9% வளர்ச்சியுடன் வருவாய் 610.1 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருப்பு தானிய ஏற்றுமதி வருவாயும் 55.8% உயர்வுடன் 171.1 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
தேங்காய் பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இரு வார திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.