பீகாரில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு நிலவுகிறது.
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, மழையுடன் சேர்ந்து 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கைமூர் மாவட்டத்தின் பகவான்பூர் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 160 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலைமையின் போது, கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் தாக்குதலால் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் திறந்த வெளியில் வேலை செய்தவர்களாக இருந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
Tags:
இந்திய செய்தி
