2340 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை
தமிழகத்தில் தற்போதைய காலியாக உள்ள 2340 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆணைகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, "பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசில் நேர்முக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இது குறித்து ஒரு நல்ல முடிவு விரைவில் வரும்" என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில், ஆசிரியர் பணி நியமனங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Tags:
இந்திய செய்தி
