ஈரானில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்!
ஈரானின் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஈரானிய மக்கள் ஈடுபட்டுள்ளதோடு அவர்களில் பலர் கொடிகளை அசைத்து மேற்கத்தேய நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதிகளின் புகைப்படங்களும் போராட்டக்காரர்களின் கைகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
Tags:
உலகம்