ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!


ஈரானில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஈரானை விட்டு வெளியேற விரும்பும் அல்லது உதவி தேவைப்படும் இலங்கையர்கள், வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்க்கண்ட தொடர்பு வழிகளின் மூலம் உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்:

📞 +98 939 205 5161

📞 +98 991 205 7522

📞 +98 936 636 0260

மின்னஞ்சல் முகவரி:

📧 slembiran@yahoo.com

மேற்கண்ட எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.