ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா : அறிக்கைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் ஈரான் மீது நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்க இராணுவம் தலையிடுமா என உலகத்தை யூகிக்க வைத்திருக்கும் நிலையில், வாஷிங்டனில் இதற்கான ஆயத்தங்கள் நடப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ப்ளூம்பெர்க் நியூஸ், பெயர் வெளியிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மூத்த அமெரிக்க அதிகாரிகள் “ஈரான் மீது அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக” தெரிவித்துள்ளது.
இது, வாஷிங்டன் “தெஹ்ரானுடனான மோதலில் நேரடியாக இறங்குவதற்கு உள்கட்டமைப்பை திரட்டி வருகிறது” என்பதற்கு சான்றாக உள்ளது.
நிலைமை இன்னும் உருவாகி வருவதாகவும், இது மாறக்கூடும் எனவும், சிலர் வார இறுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.
“சில முக்கியமான கூட்டாட்சி முகமைகளின் உயர் தலைவர்களும் தாக்குதலுக்கு தயாராகத் தொடங்கியுள்ளனர்,” என்று ஒருவர் தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.
மேலும் இது தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Tags:
உலகம்
