ஜுன் 5ஆம் திகதி அரபா தினம்;6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்


நேற்று மாலையில் சவூதி அரேபியாவில் துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதைத் தொடர்ந்து புனித அரபா தினமும் ஹஜ்ஜுப் பெருநாளும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஜுன் மாதம் 5ஆம் திகதி புனித அரபா தினமாகவும் 6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று புதன்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாகும். துல் ஹஜ் மாதத்தினுடைய ஆரம்ப 10 நாட்களும் மிகச்சிறந்த நாட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.