முல்லைத்தீவு விபத்தில் இளைஞர் இருவருக்கு காயம்; வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கப்ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், அப்பகுதியைச் சேர்ந்த பேருந்தை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி