இலங்கை பொலிஸாருக்கு நவீன ஸ்பீட் கன் சாதனங்கள்


போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் நோக்கில், இலங்கை பொலிஸாருக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன ஸ்பீட் கன் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை இரவிலும் சிறப்பாக செயல்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளன. 1 கிலோமீட்டர் முதல் 200 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வாகனங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்பீட் கன் மூலம் பதிவுசெய்யப்படும் காணொளிகளை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியும். வாகனத்தின் வேகம், ஓட்டுநரின் புகைப்படம், வாகன உரிமத் தகடு எண் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பெற இது உதவுகின்றது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.