தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!


2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மற்றும் தேவையான ஏனைய மதிப்பீட்டுச் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததும், எவ்வித தாமதமுமின்றி பெறுபேறுகள் வெளியிடப்படும் என திணைக்களம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.