தங்கநகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

 

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று (17.03.2025) மீண்டும் அதிகரித்துள்ளது.


இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 885,753 ரூபாவாக காணப்படுகின்றது.


அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 gram) 31,250 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 250,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 gram) 28,650 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 229,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 gram) 27,350 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 218,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 


இதன் மூலம், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது, இது சந்தையின் நிலவரத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கின்றது.