இன்று இடம்பெற்ற கோர விபத்ததில் குழந்தை உட்பட 21 பேர் காயம்

 

இன்று (17) காலை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேருந்து நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தபோது, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.