கடன் அட்டை பயன்பாடு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்


இலங்கையில் கடன் அட்டை பயன்பாடு 2024 டிசம்பரில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை, டிசம்பரில் 1,970,130 ஆக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பரில் 1,917,085 அட்டைகளுடன் ஒப்பிடும்போது தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.

மேலும், கடன் அட்டைகளில் நிலுவைத் தொகையும் அதிகரித்து, நவம்பரில் ரூ.151,614 மில்லியனாக இருந்த நிலையில், டிசம்பர் 2024 இல் ரூ.157,957 மில்லியனாக உயர்ந்துள்ளது.