சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு


சர்வதேச சந்தையில் இன்று (08) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.04 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.36 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

மேலும், இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.399 அமெரிக்க டொலராக உயர்வைப் பதிவு செய்துள்ளது.