டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!


இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 211.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 202.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 329.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 316.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 391.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 377.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 193.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 184.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.