உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது.
சந்தை தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.47 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.13 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.911 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
போர் பதற்றங்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் உலக அரசியல் மாற்றங்கள் ஆகியவை இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
Tags:
உலகம்
