மாணவர்கள் பள்ளியைவிட்டு விலகும் நிலை அதிகரிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், பொருளாதாரப் பிரச்சினைகளின் காரணமாக மாணவர்கள் பள்ளியைவிட்டு விலகும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் கணக்கெடுப்பின்படி, 50,345 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 2,754 மாணவர்கள் கல்வியை இடையில் விட்டு விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை அதன் பணிகள் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்த பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தாம் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
விளையாட்டு
