சீனிக்கான மொத்த விலையில் வீழ்ச்சி!


உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விலை குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 215 ரூபாவாகவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 260 ரூபாவாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, வெள்ளை சீனி 260 ரூபாவாகவும், சிவப்பு சீனி 290 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

இந்திய அரசு 10 இலட்சம் மெட்ரிக் டன் வெள்ளை சீனி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியதன் காரணமாக, நாட்டுக்குள் குறைந்த விலைக்கு சீனி இறக்குமதி செய்யப்படுவது இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சந்தையில் தற்போது, ஒரு கிலோ வெள்ளை சீனி சில்லறை விலையாக 225 ரூபாவுக்கும், சிவப்பு சீனி 280–285 ரூபா வரையிலான விலைக்கு கிடைக்கிறது.

வெள்ளை சீனியின் அதிக இறக்குமதி மற்றும் உள்நாட்டு சிவப்பு சீனியின் குறைந்த நுகர்வு குறித்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மொத்த விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.