அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபா


இன்று (மார்ச் 14) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நிலையாக உள்ளது. 

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.25 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 299.79 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் விலை 375.36 ரூபாவாக இருக்க, விற்பனை விலை 389.48 ரூபாவாக பதிவாகியுள்ளது. யூரோவின் பெறுமதி 313.84 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதுடன், 326.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கனேடிய டொலர் 200.35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதோடு, 208.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி 181.22 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகின்ற நிலையில், விற்பனை விலை 190.48 ரூபாவாக உள்ளது.