கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகீஸ்வர பண்டார, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது விளக்கமறியல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே, அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.