பெரஹராவை முன்னிட்டு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!
பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா பெரஹராவின் பாவட பெரஹரா, 2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 10.00 மணியளவில் நிறைவடையவுள்ளது.
இதனையடுத்து, குறித்த காலப்பகுதியில் 119 மஹரகம – தெஹிவளை பேருந்து வழித்தடத்தில், பொரலஸ்கமுவை நகரம் மற்றும் பெல்லன்தர சந்தி ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகமவிலிருந்து தெஹிவளை நோக்கியும், பிலியந்தலையிலிருந்து தெஹிவளை நோக்கியும் பயணிக்கும் வாகனங்கள், பெப்பிலியான சந்தியை அடைந்து இடதுபுறமாகத் திரும்பி, ஸ்பார் சுற்றுவட்டம் ஊடாக பெல்லன்தர நோக்கிச் சென்று, நெதிமால ஊடாக தெஹிவளை நோக்கிப் பயணிக்க முடியும்.
மேலும், பொரலஸ்கமுவை மற்றும் காலி வீதியை இணைக்கும் வெரஹெர சந்தியிலிருந்து கங்காராம வீதி ஊடாக கொளுமடம சந்தி வரை சென்று, அங்கிருந்து காலி வீதியை அடையும் மாற்று வீதியையும் வாகன சாரதிகள் பயன்படுத்த முடியும்.
எனவே, பெரஹரா நடைபெறும் காலப்பகுதியில் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
