இந்த வருடத்தில் இதுவரை 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை டெங்கு நோயினால் 65 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இம்மாதத்தின் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 4,292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
