தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை!
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளுக்கான தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
