ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள உபி அரசு!


இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில அரசு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடமிருந்து ஒரு லீற்றர் பசுவின் கோமியத்தை 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டம் முதற்கட்டமாக 15 கிராமங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் சுமார் 500 லீற்றர் பசுவின் கோமியம் சேகரிக்கப்படுவதாகவும், அதனைப் பயன்படுத்தி இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாய உரங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனைத் திட்டம் வெற்றியடைந்தால், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.