ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!


வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நேற்று (27) திங்கட்கிழமை குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக ஊஞ்சல் தடி முறிந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குழந்தையின் தாய் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.