இலங்கைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்; முதலிடத்தில் இந்தியா!
ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 13,13,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையில் மட்டும் 1,67,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 38,785 ஆகும்.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 18,419 பேரும், நெதர்லாந்திலிருந்து 10,540 பேரும் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 3,10,293 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 2,79,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
