வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
2026 ஆம் ஆண்டில் 10,000 இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பணியாற்றவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வேலைவாய்ப்பு திட்டம் முழுமையாக வெளிப்படையான மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டில் இதுவரை 2,500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலும் 6,500 பேருக்கான வேலைவாய்ப்புகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் புதிய துறையில் கூடுதலாக 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் மொத்தம் 10,000 வேலைவாய்ப்புகள் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதன் மூலம் குறைந்த செலவில், பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
