நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் வழக்கு: முக்கிய தகவல்களை வெளியிட நீதிமன்றம் தடை!


நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு விசாரணையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சுமார் இரண்டு மணி நேரம் சாட்சியமளித்துள்ளார்.

நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை சாட்சியப் பதிவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த சாட்சியங்களில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான தகவல்கள் உள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார். இதனால், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சாட்சியங்களை எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடக் கூடாது எனவும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட 89 சிறை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பான அறிக்கைகளும் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.