ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு: பொலிஸ் அதிகாரி கைது!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CID) இன்று (31) கைது செய்துள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் படி, கைது செய்யப்பட்ட அதிகாரி எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Tags:
இலங்கை செய்தி
