இன்று முதல் மழையுடனான வானிலை தீவிரமடையும் வாய்ப்பு!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
