மத்திய கிழக்கு பதற்றம்: குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து, குவைத்திற்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (20) முதல் 2026 ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மேலதிக தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், இலங்கைக்குள் 1979, சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979, அல்லது செய்தி பரிமாற்றத்திற்கான WhatsApp +94 74 444 1979 என்ற இலக்கங்கள் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்புகொள்ளலாம்.
மேலும், தங்கள் பயண முகவரை அணுகவோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Tags:
இலங்கை செய்தி
