பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு தரப் பரிசோதனை கட்டாயம் – செப்டம்பரில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் தரம் மற்றும் தொழில்நுட்ப நிலையைப் பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வீதி விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அலட்சியம் மற்றும் வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகளே பிரதான காரணங்கள் எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளைப் பணியமர்த்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
