நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்: 83 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள் - 61 உயிரிழப்புகள் பதிவு!
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 17,779 ஆகும். அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 16,665 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாணங்களின் அடிப்படையில், மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், தென் மாகாணத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
